மகப்பேறு மருத்துவ சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு
மகப்பேறு மருத்துவர்களின் கடுமையான உழைப்பினால் மகப்பேறு இறப்பு விகிதம் இந்தியாவை காட்டிலும் தமிழகத்தில் குறைவாக இருக்கின்றது என மருத்துவ மகப்பேறு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் தேனியில் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவ சங்கம் சார்பில் மகப்பேறு மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மகப்பேறு மருத்துவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர் மகப்பேறு இறப்பு, சிசு இறப்பு குறித்து பல்வேறு விதமான தணிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது இதனால் எங்களுக்கு மன அழுத்தம் உண்டாகிறது மகப்பேறு சிகிச்சையில் அதிக ரத்தப்போக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் போன்ற பல்வேறு சிக்கலான சிகிச்சை செய்து வருகிறோம் மகப்பேறு இறப்பு குறித்து தணிக்கை செய்யும் குழுவில் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள் இடம்பெறாததால் தாங்கள் கூறும் விளக்கத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை இதனால் மருத்துவ மகப்பேறு துறையைச் சேர்ந்த நபர்கள் குழுவில் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்தனர் மேலும் பேசிய அவர்கள் பத்து வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 120 முதல் 130 வரை இருந்தது தற்போது 2023-24ஆண்டு நிலவரப்படி தமிழ்நாடு இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 46 என்று இருக்கின்றது மகப்பேறு மருத்துவர்களின் கடுமையான உழைப்பினால் தான் இறப்பு விகிதம் குறைந்துள்ளது இந்தியாவை விட தமிழ்நாட்டின் சராசரி இறப்பு விகிதம் குறைவாக இருக்கின்றது என்று தெரிவித்தனர் பேட்டி - சாந்தா விபலா ( தலைவர், மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவ சங்கம் )