கரூரில் பிரியாணி வாங்க அலை மோதிய கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் பிரியாணி வாங்க அலை மோதிய கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் பிரியாணி வாங்க அலை மோதிய கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை எளியோர் எழுச்சி நாளாக, கரூர் மத்திய பகுதி சிறுபான்மை நலப்பிரிவு அணி சார்பில், கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே அமைப்பாளர் முகமது அலி தலைமையில் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக கரூர் மத்திய நகர செயலாளரும், கரூர் மாநகராட்சியின் மண்டல தலைவருமான கனகராஜ் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பிரியாணி பொட்டலங்களை வாங்கிக் கொண்ட அப்பகுதி பொதுமக்கள் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மத்திய பகுதி சிறுபான்மை நலபிரிவு அணி துணை அமைப்பாளர்கள் எகியா பாஷா, கெளஸ் மைதீன் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பித்தனர். அப்போது பொதுமக்கள் பிரியாணி வாங்கும் ஆர்வத்தில் ஒருவருக்கொருவர் முந்தி சென்று வாங்க முற்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.