ராசிபுரம் வழக்கறிஞர்கள் அரசியலமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ராசிபுரம் வழக்கறிஞர்கள் அரசியலமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2024-11-27 11:37 GMT
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், 75வது ஆண்டை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் கணபதி தலைமையில், துணைத்தலைவர் செல்வகுமார் முன்னிலையில், அன்பு, சமாதானம் மற்றும் சமத்துவம் நிறைந்த அரசியலமைப்புச் இந்தியாவை உருவாக்கிட சட்டத்தை நாம் பாதுகாக்க உளமாற உறுதியேற்போம் என வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில், துணை அமைப்பாளர்கள் கண்ணன், வெங்கடாசலம், வழக்கறிஞர்கள் லோக சரவணன், செல்வராஜ், கார்த்தி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News