துணை முதல்வர் பிறந்தநாள்: நாமக்கல் ஒன்றிய திமுக சார்பில் மாருதி நகர் அரசு பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன

நாமக்கல்- திருச்சி சாலை பொன்விழா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-11-27 12:35 GMT
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் அறிவுறுத்தலின்படி, நாமக்கல்- திருச்சி சாலை பொன்விழா நகரில் உள்ள மாருதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் ஒன்றிய கழக செயலாளரும், அட்மா குழுத் தலைவருமான வி.கே.பழனிவேல் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு, இனிப்புகள் மற்றும் நோட் புக், பேனா, பென்சில் முதலியவை வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் நலங்கிள்ளி, ஒன்றிய துணைச் செயலாளர் வெங்கடாசலம், அருள், ஒன்றிய பொருளாளர் இந்திரா நகர் ச.கணேசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பா.கிருபாகரன், மாவட்ட பிரதிநிதி மணி, மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் பைரோஸ், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் பார்த்த சாரதி மற்றும் ஒன்றிய சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ம.மௌலானா, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுந்தரராஜ், ரகுபதி, செல்வராஜ், பாலசுப்ரமணி, வினோத் மற்றும் கழக நிர்வாகிகள் ஜெகன், தாஸ் சக்தி, நபில், செந்தில், ஆனந்த சூர்யா, ராம்குமார், கண்ணன், ஸ்டாலின், அருள்குமார்,லோகு, புஷ்பராஜ், தாஸ் நித்திஷ்குமார் மற்றும் வினோத் ராஜா ,நவீன் ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகள் வகுரம்பட்டி ஊராட்சி கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News