நிலத்தடி நிரீல் சாயக்கழிவு நீர் வார்டு கவுன்சிலர் புகார்
குடிநீரில் சாயக் கழிவுநீர் கலப்பதாக வார்டு கவுன்சிலர் பரபரப்பு புகார் தெரிவித்தார்
பள்ளிபாளையம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இதில் 12-வது வார்டு பகுதியில் கடந்த வாரத்தில் நிலத்தடி நீரில் சாயக் கழிவுநீர் கலந்து சிவப்பு நிறத்தில் நீர் வெளியேறியது. மேலும் அருகில் உள்ள நீர் நிலைகள், கிணற்றில் அதிக அளவு சாயக்கழிவு நீர் கலந்ததால், அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளிபாளையம் வட்டாரம் முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஒரு வார காலமாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய் துறையினர், வட்டாட்சியர் வருவாய் கோட்டாட்சியர், பொதுப்பணித்துறையினர் என பல்வேறு தரப்பு அரசு அதிகாரிகள் சாயக்கழிவு நீரால் பாதிப்பு ஏற்பட்டுள்ள தேவாங்கபுரம் , ஆர்.எஸ் ரோடு, ராமசாமி தெரு, உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சாயக்கழிவு நீர் கலந்த நீர் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும் தினந்தோறும் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ள போதிலும் ,தற்போது வரை சாயக்கழிவு நீர் குடிநீரில் கலந்து வருகிறது. அதிகாரிகளின் தொடர்ச்சியான ஆய்வு இருந்த போதிலும் நடவடிக்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என அதிருப்தி அடைந்த 12-வது வார்டு திமுக கவுன்சிலர் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மாதந்திர நகர மன்ற கூட்டத்தில் சாயக்கழிவு நீர் கலந்த வாட்டர் கேனுடன் வந்து, நகர்மன்ற தலைவர் செல்வராஜ் நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தனர். மேலும் தங்கள் வார்டு பகுதியை சுற்றிலும் சாயப்பட்டறைகள் ஏதும் இயங்காத நிலையில், குடிநீரில் சாயக் கழிவு நீர் எவ்வாறு கலந்தது என்பதை குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்வார்கள் என நகராட்சி ஆணையாளர் தயாளன் கூறினார்.இதன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது .. இதன் காரணமாக நகர மன்ற கூட்ட சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.