சனான்கோட்டை காவிரி ஆற்றில் நள்ளிரவில் மணல் திருடிய 8 பேர் கைது.
சனான்கோட்டை காவிரி ஆற்றில் நள்ளிரவில் மணல் திருடிய 8 பேர் கைது.
சனான்கோட்டை காவிரி ஆற்றில் நள்ளிரவில் மணல் திருடிய 8 பேர் கைது. கரூர் மாவட்டம், காவிரி ஆற்று பகுதியில் நள்ளிரவில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவது குறித்து, கரூர் கோட்ட ஆற்று பாதுகாப்பு நீர்ப்பாசன ஆய்வாளர் முத்துக்குமாருக்கு கிடைத்த தகவலின் பேரில்,குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் நவம்பர் 26 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியிலிருந்து 5 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில், சனான் கோட்டை காவிரி ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மாட்டு வண்டியில் வாங்கல் பகுதியைச் சேர்ந்த தென்னரசு, சதீஷ்குமார்,விவேக், முனியப்பன், மணிகண்டன், சஞ்சய், சரவணன், கார்த்தி ஆகிய எட்டு பேரும் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இவர்கள் கடத்தி வந்த ஐந்து யூனிட் மணலை பறிமுதல் செய்து, எட்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, டிசம்பர் 10ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.