ராணுவம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டண சலுகை அளித்த தியேட்டர் அதிபர்
ராணுவம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டண சலுகை அளித்த தியேட்டர் அதிபர்
ராணுவம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டண சலுகை அளித்த தியேட்டர் அதிபர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஜெய் சக்தி தியேட்டரில் தீபாவளியை ஒட்டி இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் ஓடி கொண்டுள்ளது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. ரானுவ படையும், இந்திய நாட்டின் பெருமையும் எடுத்துரைக்கும் வகையில் வெளியான அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. இளம் வயது முதல் பெரியவர்கள் வரை இப்படத்தை ஆர்வமுடன் சென்று பார்த்து வருகின்றனர். அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கும் ராணுவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டிக்கெட், கேண்டீன் சலுகை கட்டடத்தை தியேட்டர் உரிமையாளர் அறிவித்தை தொடர்ந்து இன்று செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 320 பார்த்து ரசித்தனர். படம் குறித்து பள்ளி மாணவர்கள் கூறும் போது ராணுவ வீரர்கள் பற்றி படம் என கூறி அழைத்து வந்தனர். நாட்டுக்காக உழைக்கும் ராணுவ வீரர்கள் பற்றிய காட்சிகள் எங்களுக்குள் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என தெரிவித்தனர்