தமிழக முதலமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக நிர்வாகிகள் 26 பேர் மீது வழக்கு பதிவு.

தமிழக முதலமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக நிர்வாகிகள் 26 பேர் மீது வழக்கு பதிவு.

Update: 2024-11-27 11:46 GMT
தமிழக முதலமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக நிர்வாகிகள் 26 பேர் மீது வழக்கு பதிவு. அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் குறித்து கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, கரூர் பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால், அனுமதி இன்றி, சட்ட விரோதமாக ஒன்று கூடி, ஆர்ப்பாட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சி கரூர் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், இளைஞர் அணி தலைவர் முத்து, கரூர் மாவட்ட தலைவர் தமிழ்மணி, அரவக்குறிச்சி ஒன்றிய தலைவர் கிஷோர், மாவட்டத் துணைத் தலைவர் குமரேசன் உள்ளிட்ட 26 பேரை நேற்று கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து 26 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News