வீரராக்கியம் பிரிவு அருகே அரசு பேருந்து மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. இருவர் படுகாயம்.
வீரராக்கியம் பிரிவு அருகே அரசு பேருந்து மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. இருவர் படுகாயம்.
வீரராக்கியம் பிரிவு அருகே அரசு பேருந்து மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. இருவர் படுகாயம். கரூர்,காந்திகிராமம், வள்ளலார் நகர் அருகே உள்ள இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் வயது 39 .இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று நவம்பர் 26 ஆம் தேதி மாலை 4:15 மணியளவில், திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் தனது பேருந்து ஓட்டிச் சென்றார். பேருந்து வீரராக்கியம் பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிர் திசையில், திருச்சி மாவட்டம், வளந்தான் கோட்டை, பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி வயது 31 என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனத்தில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், திருச்செந்துரை அரிஜன தெருவை சேர்ந்த மணிகண்டன் வயது 30 என்பவர் உடன் வந்தார். அப்போது எதிர்பாராத நேரத்தில் பாலசுப்பிரமணி ஓட்டி வந்த சரக்கு வாகனம் அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாலசுப்பிரமணி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுனர் காளியப்பன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வேனை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாலசுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.