நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கட்சியின் 17-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் வீர. வினோத் சேகுவரா தலைமை வகித்தார். இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் கட்சியின் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதனை தொடர்ந்து நாமகிரிப்பேட்டை ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர் மதி வள்ளுவன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ஆனந்தன், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.