சிறுபான்மையினர் உரிமை தின விழா - நலத்திட்ட உதவி வழங்கல்

சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கு அரசு பல நல திட்டங்களை செயல்படுத்துவதாக தெரிவித்தனர்

Update: 2023-12-21 10:09 GMT

நலதிட்ட உதவி வழங்கல்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமை தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மாநில சிறுபான்மையினர் ஆணையம் உறுப்பினர் தமீம் அன்சாரி கலந்து கொண்டார். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்த பொழுது, சிறுபான்மையினர் பொருளாதாரம் ,கல்வியில் முன்னேற்றம் அடைய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மை சமூக மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை, உருதுமொழி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாநில அளவில் பரிசுகள் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
Tags:    

Similar News