மனித உரிமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து பேரளி கிராம பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2023-12-16 13:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல்துறையினரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினரும் இணைந்து சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து பேரளி கிராம பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரளி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணைக் காவல் கண்காணிப்பாளர் வளவன் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைந்து சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேரளி கிராம பொதுமக்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தீண்டாமை, சாதிய பாகுபாடுகள், இரட்டை குவளை முறை, மற்றும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவைகளே இல்லாத மனிதாபிமானமிக்க சமூகத்தை உருவாக்க வேண்டுமெனில் பொதுமக்களாகிய நீங்கள் தான் அதற்கான முழு முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்த சமூகத்தில் அனைவரும் சமம் என்பதையும் பொதுமக்களிடையே கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் பொதுமக்கள் கூறிய சாலைவசதிகள் குறித்த பிரச்சனைகள், குடிநீர் வசதி குறித்த பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளுக்கு உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Tags:    

Similar News