கிராம வேளாண் முன்னேற்றக் குழுவுக்கு ரபி பருவ பயிற்சி
புத்தூரில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுவினருக்கு வேளாண் அலுவலர்கள் ரபி பருவ பயிர் வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே தலைவாசலை அடுத்துள்ள புத்தூரில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுவினருக்கு நடைபெற்ற ரபி பருவ பயிற்சி.தலைவாசல் அடுத்துள்ள புத்தூரில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு ரபி பருவ பயிற்சி தோட்டக்கலை உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ரபி பருவத்துக்கு ஏற்ற தோட்டக்கலைப் பயிர்கள், சாகுபடி முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். தலைவாசல் துணை வேளாண்மை அலுவலர் மணவழகன், ரபி பருவத்திற்கு ஏற்ற வேளாண் பயிர்கள், சாகுபடி முறைகளை விளக்கினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சக்தி, காய்கறி பயிர்களுக்கு குழிநட்டும் முறையில் நாற்றங்கால் விடுமுறையினைப் பற்றி செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.உதவி தோட்டக்கலை அலுவலர் ராமு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் வழங்கப்படும் மானிய திட்டங்களை பற்றி விளக்கினார் உதவி வேளாண்மை அலுவலர் பிரகாஷ், நெல், மக்காச்சோளப் பயிர்களுக்கு விதை நேர்த்தி செயல் விளக்கம் அளித்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆத்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ், முத்துவேல் ஆகியோர் செய்திருந்தனர்.