ரயில்வே ஊழியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை !

நாகர்கோவில் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை.;

Update: 2024-02-24 04:57 GMT

ரயில்வே ஊழியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் உள்ள ரயில்வே கேட் கீப்பர்  மற்றும் பொதுமக்கள் அந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் அந்த வாலிபர் உயிரிழந்தார். இதை அடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் கன்னியாகுமரி அருகே உள்ள மகாராஜபுரம் பகுதி சேர்ந்த முத்து கண்ணன் (30) என்று தெரியவந்தது. இவர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். முத்து கண்ணனை அவரது மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்து முத்து கண்ணன் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீஸ்கார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News