குமரியில் மழை நீடிப்பு அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2023-10-24 09:03 GMT

நீர்வரத்து அதிகரிப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிறைந்தன. அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நகர் பகுதிகளில் மழை சற்று குறைந்தது. ஆனால் மலையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்டபெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் தற்போது 70.55 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 581 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.10 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 568 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 220 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. வழக்கமாக பேச்சிப்பாறை அணையில் 42 அடியும், பெருஞ்சாணி அணையில் 72 அடியும் தண்ணீர் எட்டப்பட்டால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தற்போது அந்த அளவை அணைகள் நெருங்கி வருவதால் நீர் மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தொடர்மழையின் காரணமாக திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சனி, ஞாயிறு மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதால் திற்பரப்பு அருவி, தடாகம், பூங்கா போன்றவை களை கட்டி காணப்பட்டது.
Tags:    

Similar News