சங்கரன்கோவிலில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற நிர்வாகியாக ராஜூ நியமனம்

அனைத்துலக எம்ஜிஆர் மன்ற நிர்வாகியாக கண்ணன்(எ) ராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-03-11 10:23 GMT
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற நிர்வாகியாக கண்ணன்(எ) ராஜூ நியமனம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் என்ற ராஜூ. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வரும் இவர் சங்கரன்கோவில் நகர் மன்ற துணை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நமது அம்மா நாளிதழில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சங்கரன்கோவிலை சேர்ந்த கண்ணன் என்ற ராஜூ அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளராக நியமனம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News