குமரியில் இளம்பெண் பலாத்காரம்:2பேர் கைது
குமரியில் இளம் பெண் பலாத்கார சம்பவத்தில் 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் கடந்த சிலங்களுக்கு முன்பு தமிழக கேரள எல்லை பகுதியான பருத்தியூர் என்ற சுற்றுலா பகுதிக்கு தனது காதலனுடன் சென்றிருந்தார்.
அப்போது இரவு வேளை வரை நீண்ட நேரம் காதல் ஜோடி தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கும்பல் ஒன்று காதலரையும் அவர் நண்பரையும் மிரட்டி நிர்வாணமாக தாக்கி விட்டு, இளம்பெண்ணை மிரட்டி ஒருவர் பின் ஒருவராக இரண்டு பேர் பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தன. இந்த நிலையில் பொழியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்தனர். இளம் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்த ரெண்டு பேர் மீன்பிடி தொழிலுக்கு கடலுக்கு சென்றது தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று கரைக்கு வந்துள்ளனர்.
இதை அறிந்த போலீசார் இன்று காலை இரண்டு பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்கள் மீது பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.