விழுப்புரத்தில் இடைநின்ற மாணவன் பள்ளியில் மீண்டும் சேர்ப்பு

விழுப்புரத்தில் இடைநின்ற மாணவன் பள்ளியில் மீண்டும் சேர்க்கபட்டான்.

Update: 2024-02-20 15:51 GMT

மாணவன் பள்ளியில் சேர்ப்பு

விழுப்புரம் நகராட்சியில், கூட்டம் நிறைந்த பொது இடத்தில் தேவா என்கிற சிறுவன் கையில் சில பொருட்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்து வருவதாக சமூக வலைதளங்களில் வந்த தகவல் பகிரப்பட்டு வந்தது.

இத்தகவலை அறிந்த மாவட்ட ஆட்சியர் பழனி இது தொடர்பான உண்மை தன்மை அறிந்து தகவல் தெரிவித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில், தேவா என்கிற சிறுவன் பூந்தோட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து குடும்ப சூழ்நிலை காரணமாக இடைநின்றதாக தகவல் வரப்பெற்றதை தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், உதவி திட்ட அலுவலர், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட்டார வள மேற்பார்வையாளர்கள் ஆகியோரால் சிறுவன் மீட்கப்பட்டு, மீண்டும் கோலியனூர் ஒன்றியம், வழுதரெட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் அம்மாணவனின் வயதுக்கேற்ப வகுப்பான எட்டாம் வகுப்பில் சேர்க்கப்பட்டு,

விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், சீருடைகள் ஆகியவையும் வழங்கப்பட்டன, மேலும் மாணவனை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும் பெற்றோரிடம் கல்வியின் அவசியம் மற்றும் அரசால் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து தொடர்ந்து மாணவனை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News