மேட்டூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மேட்டூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Update: 2024-03-08 02:21 GMT

ஆக்கிரமிப்புகள் அகற்றம் 

.சேலம் மாவட்டம்,மேட்டூர் மேற்கு மெயின் ரோட்டில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையை ஆக்கிரமித்து 100- கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டு இருந்தது. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி டெய்லர் பொன்ராஜ் என்பவர் 2020-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆகிரப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்கள்தானாக முன்வந்து கடையை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் அவகாசம் வழங்கினார்.

ஆனால் வழக்கம் போல் கடைகள் செயல்பட்டு வந்தது சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளுக்கு குறியீடு செய்தனர்.இதனை அடுத்து நேற்று நீதிமன்ற உத்தரவுபடி சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டமாக நேற்று 60 கடைகளும் பின்னர் படிப்படியாக மீதமுள்ள கடைகளும் அகற்றப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News