பெரம்பலூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பெரம்பலூர் நகரில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
பெரம்பலூர் நகரில் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கடந்த 2 நாட்களுக்கு முன்பே நகராட்சி நிர்வாகம் மூலம் பெரம்பலூர் நகரில் உள்ள அனைத்து வணிகர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரம்பலூர் நகர் மார்க்கெட் தெரு மற்றும் காமராஜர் சிக்னல் பகுதியிலிருந்து 4 ரோடு வரை உள்ள வணிகர்கள் கடை மற்றும் அலுவகம் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர், நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் அவர் முன்னிலையில் டிசம்பர் - 14ம் தேதி அகற்றினார்கள்.
மேலும் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ள விளம்பர பதாகைகள், மற்றும் தாழ்வாரங்கள் விளம்பர தட்டிகள், பலகைகள், ஆகியவற்றை அப்புறப்படுத்தி, நகராட்சி வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
இதனை அடுத்து மார்க்கெட் தெருவில் உள்ள தள்ளுவண்டி மற்றும் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமிப்பு இன்றி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் மீண்டும் தொடர்ந்தால் கடை உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த ஆக்கிரமிப்பின் போது நகராட்சி ஆய்வாளர்கள் மாணிக்க செல்வன், வருவாய் ஆய்வாளர் பார்திபன், கத்தசாமி, சீனிவாசலு, திருச்சந்தர், பன்னீர்செல்வம், , மற்றும் ரவிஉள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் உடன் இருந்தனர்.