காங்கேயம் அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க கோரிக்கை

காங்கேயம் அடுத்த நீலகாட்டுபுதூரில் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகளை சீரமைக்க மின்வாரிய துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

Update: 2024-05-13 14:53 GMT

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதிக்குட்பட்ட நீலக்காட்டுப்புதூர் பகுதியில் இருந்து குருக்கத்தி கிராமப் பகுதிக்கு செல்லும் பாதையில் விவசாய நிலங்கள் உள்ளது. இப்பகுதியில் பல மாதங்களாக சுமார் 10 அடி உயரத்திற்கு கீழ் குடியிருப்புகளுக்கு செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே இந்த மின்கம்பிகளால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அந்த பாதையில் செல்லக்கூடிய வாகனங்கள் எதிர்பாராத விதமாக கம்பிகளில் மோதினால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. எனவே காங்கயம் மின்வாரிய அலுவலகத்திற்கு,

இப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த கவனிக்கப்படாமல் வெகு நாட்களாக தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்கம்பிகளை உயரமாக மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News