பட்டியல் இன மக்களுக்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை 

பட்டியல் இன மக்களுக்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை  வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-16 09:01 GMT
சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம், சிபிஎம் கிளைக் அமைப்புக் கூட்டம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் சங்க  மாவட்ட துணைத் தலைவர் மேனகா, ஒன்றியத் தலைவர் ராஜேஷ் கண்ணா  ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். 

கூட்டத்தில், பி.நடராஜன் கிளைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.  அழகியநாயகிபுரம் ஊராட்சி இரளிவயல் பகுதியில் உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த 70 குடும்பங்களுக்கு தனி சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வெள்ளங்குழி பகுதியில் உள்ள 25 குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். மின்சார வசதி இல்லாத, 14 குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகை இதுவரை வழங்கப்படாத குடும்பங்களுக்கு வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News