ஹூப்ளி சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க கோரிக்கை
ஹூப்ளி சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க கோரிக்கை வைத்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-29 15:58 GMT
சிறப்பு ரயில்
கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து ராமேஸ்வரம் வரை கோடை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில் தொடர்ந்து அக்., வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த ரயிலுக்கு பயணிகளிடம் ஏற்பட்டுள்ள வரவேற்பால் தற்போது, ஜன.6 முதல் மார்ச் 31 வரை 3 மாதம் நீட்டிப்பு செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சனிக்கிழமை தோறும் ஹூப்ளியில் இருந்து தர்மபுரி, சேலம், திருச்சி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கும், மறுமார்க்கத்தில் ஞாயிறுதோறும் இயக்கப்பட்டது. இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று காரைக்குடி தொழில் வணிக கழகம் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது