12 ஐம்பொன் சிலைகள் மீீட்பு

12ஐம்பொன் சிலைகளை குளத்தின் கரையில் இருந்து மீீட்கப்பட்டது.

Update: 2023-12-17 15:23 GMT
ஐம்பொன் சிலை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூரில், 12 ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்ற மர்மநபர்கள், சாக்கு மூட்டையில் கட்டி கோவில் குளத்தின் கரையில் போட்டு விட்டு சென்றது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.   தஞ்சாவூர், பூக்குளம் பகுதியில், சத்திரம் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான வேதவள்ளி சமேத நாகநாதர் கோவில் உள்ளது.

இங்கு தினேஷ் என்பவர் அர்ச்சராக உள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மார்கழி மாதம் முதல் நாள் என்பதால், அதிகாலையிலேயே தினேஷ் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக வந்து கோவிலை திறந்தார். அப்போது, ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, ஒரு அடி முதல் இரண்டு அடி வரை உயரம் கொண்ட நடராஜர் சிலை, சிவகாமசுந்தரி, மாணிக்கவாசகர், அஸ்திரதேவர், பைரவர், பிச்சாடனார், சுவாமி அம்பாள் சிலைகள் 2, நால்வர் சிலைகள் 4 என மொத்தம் 12 சிலைகள் திருடி போயிருந்தது.

அதிர்ச்சியடைந்த தினேஷ், தஞ்சாவூர் நகர மேற்கு காவல்துறைக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த காவல்துறையினர், கோவிலின் நுழைவு வாயில் திறக்கப்பப்படாமல், மர்ம நபர்கள் எந்த வழியாக வந்தனர் என ஆய்வு செய்தனர். அப்போது, கோவிலின் பின்பகுதி வழியாக மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் வந்தது தெரிய வந்தது.

மேலும் அவர்களின் கால் தடம் சுவரில் பதிந்திருந்தது. தொடர்ந்து, காவல்துறையினர் மர்ம நபர்களின் கால் தடம் பதிவான பகுதி வழியாக கோவிலின் பின்பகுதிக்கு சென்று பார்த்த போது, அங்குள்ள பிட்டாசு குளத்தின் கரையில், சாமி சிலைகள் சாக்கு மூட்டையில் கட்டி கிடந்தது.   பின்னர், சிலைகளை கோவிலுக்கு கொண்டு வந்து, பூஜைகள் செய்யப்பட்டு, பாதுகாப்பாக அறையில் வைத்து பூட்டப்பட்டன. இது குறித்து மேற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிலைகளை கொள்ளையடித்த நபர்களை தேடி வருகின்றனர்.

கோவிலில் சி.சி.டி.வி., கேமராக்கள் இல்லாத நிலையில், திருடிய நபர்கள் சிலைகளை விட்டு சென்றதால், சிலைகள் தப்பியது.

Tags:    

Similar News