ஆய்வுக்கூட்டம் !
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, நீதிமன்றங்களில் தொடரபட்டுள்ள வழக்குகளின் நிலைகுறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
Update: 2023-12-14 13:25 GMT
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரபட்டுள்ள வழக்குகளின் நிலைகுறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைப்பெற்றது
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் நடைப்பெற்ற ஆய்வு கூட்டத்தில் நீதிமன்றங்களில் தொடர்பட்டுள்ள வழக்குகளில் நிலைகுறித்து விவாதிக்கபட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கு பிந்தைய தொடர்பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கபட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.