விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2024-02-29 05:13 GMT

 ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் 31-வது பொதுக்குழு கூட்டம் மற்றும் ஆண்டுவிழா கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கவுதமன் தலைமை தாங்கினார். லோகநாதன், லட்சுமிகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க ஆலோசகர் வாசுகலிவரதன் வரவேற்றார். செய லாளர் பார்த்திபன், வரவு செலவு அறிக்கை சமர்பித்தார். இக்கூட் டத்தில் மருத்துவப்படியை ரூ.1000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும், பஸ்சில் சலுகை முறையில் ஆண் ஓய்வூதியதாரர்களுக்கு பயணிக்க உத்தரவிட வேண்டும், அரசுப் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திருவெண்ணெய்நல்லூர் வட்டார தலைவர் கண்ணன், செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் செல்வராசு, விழுப்புரம் குறள்நெறி மன்ற தலைவர் கண்ணன், கவிஞர் விநாயகமூர்த்தி, தமிழ் பேராசிரியர் பழமலய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News