விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் சாலை மறியல்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது விவசாயிகள் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

Update: 2024-02-13 07:39 GMT
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிர்வாணத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு பேசியது, இந்தியா ஒரு ஜனநாயக நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் எல்லோரும் சுதந்திரமாக வாழும் இந்தியாவில் விவசாயிகளை மட்டும் அடிமைகளாக நடத்துவது நியாயமா?, மத்தியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை விவசாய விலைப் பொருளுக்கு கொடுக்கவில்லை என்று, விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜக வாக்களித்து வெற்றி பெற செய்தோம். பிரதமர் மோடி 2 மடங்கு லாபகரமான விலையை விவசாய விலை பொருளுக்கு தருவதாக 2014 ஆண்டும், 2019 ஆண்டும் தேர்தல் நேரத்தில் கூறினார். ஆனால் இதுவரை எந்த திட்டத்தையும் நிறைவேற்ற வில்லை சாட்டினார். குறிப்பாக 1 கிலோ நெல்-க்கு ரூ 54 தருவதாகவும், கரும்பு 1 டன்-க்கு ரூ 8100 தருவதாகவும் கூறிவிட்டு விவசாயிகளை ஏமாற்றி விட்டார். தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகளை புறக்கணித்து வருகிறது. அன்னையில் ராமர் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தது மகிழ்ச்சி தான், ஆனால் இந்நாட்டில் இருக்கக்கூடிய விந்து விவசாயிகளை வஞ்சிப்பது எந்த வகை நியாயம் என கேள்வி எழுப்பினார். ஆகையால் 90 கோடி விவசாயிகளை அழிக்காமல் காப்பாற்றுங்கள், இல்லையென்றால் இந்து விவசாயிகளுக்கு விஷத்தை கொடுத்து கொன்று விடுங்கள் என்றார். விவசாயிகளுக்கு லாபகரமான விலையை கொடுக்காததால் சட்டை வேஷ்டியை பிடுங்கிக் கொண்டு கோவனத்தை கொடுத்து விட்டது. ஆகையால் இன்று கோவனம் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டோம், விவசாயிகள் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலமை இன்னும் நீடிக்கிறது. விவசாயிகளுக்கு 2 மடங்கு லாபகரமான விலையை விவசாய விலைப் பொருள்களுக்கு கொடுக்கவில்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலில் 111 விவசாயிகள் , மோடி அவர்கள் போட்டியிடும் தொகுதியில் நிர்வாணமாக தங்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தல், பிரச்சாரம் செய்வது போன்ற செயல்களில் நிச்சயம் ஈடுபடுவோம் என தெரிவித்தார். விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துகிறோம். ஆனால் மாநில அரசும் ,காவல் துறையும் எங்களது போராட்டங்களை தடுப்பது நியாயமா என கேள்வி எழுப்பினார்.
Tags:    

Similar News