சாலை விரிவாக்க பணி துவக்கம்

ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற சாலை விரிவாக்க பணியை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார்.

Update: 2024-01-12 02:22 GMT

சாலை விரிவாக்க பணிகள் தொடக்கம்

ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருச்செங்கோடு நகராட்சி வாலரை கேட்பகுதி முதல்கொல்லப்பட்டி வரையிலான 1.7 கி.மீ சாலை நான்கு கோடி 45 லட்சம் மதிப்பில் விரிவாக்கம் செய்யும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் தமிழரசி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், நகர் மன்ற உறுப்பினர்கள் செல்லம்மாள் தேவராஜன், அசோக் குமார், அண்ணாமலை, ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News