சாலை பணியாளர்கள் கோரிக்கை முதல்வருக்கு கடிதம்

பெரம்பலூரில் சாலை பணியாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பினர்.

Update: 2024-02-13 08:46 GMT
மனு அனுப்பிய சாலை பணியாளர்கள்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், பிப்ரவரி 12ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தபால் நிலையத்தில், சாலை பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நிலுவையில் உள்ள, சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்களமாக அறிவிக்க வேண்டும்,

சாலை பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வி திறன் பெறா ஊழியருக்கான ஊதியம் ரூ5200 , ரூ20,000 தர ஊதியம் ரூ1900 நிர்ணயம் செய்து ஏழாவது ஊதிய மாற்ற பலன்கள் வழங்க வேண்டும், பணி நீக்க காலத்தில் இறந்து போன சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்கிட வேண்டும்,

சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி மற்றும் நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும், முடக்கப்பட்ட பஞ்சப்படி சரண் விடுப்பு ஊதியம், உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இதனை நிறைவேற்ற கோரி,

தமிழக முதல்வர் மற்றும், அமைச்சர், துறை செயலர் ஆகியோர்களுக்கு, கோரிக்கைகளை தபால் மூலம் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை தபால்களை அனுப்பினார்கள்.

Tags:    

Similar News