கலிங்கப்பட்டியில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை
கலிங்கப்பட்டியில் அடுத்தடுத்த வீடுகளில் 65 சவரன் நகை, ரூ.7 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
Update: 2024-02-28 07:33 GMT
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டி கிராமத்தில் தினகரன் மற்றும் அழகர்சாமி என்பவர வீட்டுக்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் இரண்டு வீடுகளிலும் கொள்ளை அடித்த 65 பவுன் மற்றும் 7 லட்சம் ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதில் தினகரன் வீட்டை வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடந்ததே கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனே கரிவலம்வந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அந்தப் பகுதியில் உள்ள சிசிடி காட்சி மூலம் திருடர்களை தேடி வருகின்றனர், இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.