நாமகிரிப்பேட்டையில் போலி தங்க நாணயம் கொடுத்து ரூ.20 லட்சம் மோசடி

நாமகிரிப்பேட்டை பகுதியில் போலி தங்க நாணயம் கொடுத்துபெண்ணிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து போலீஸார் வி்சாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2024-06-06 15:24 GMT

போலி தங்க நாணயம் கொடுத்தவர்கள் கைது

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியில் போலி தங்க நாணயங்கள் கொடுத்து பெண்ணை ஏமாற்றி ரூ. 20 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர். இதில் தொடர்புடைய தரகர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.     

நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த அதிசயராஜ் மனைவி பத்மாவதி. இவர் அப்பகுதியில் ஆடை தயாரிப்பு தொழில் செய்து வருகிறார். இவரது தொழிற் கூடத்தில் அன்னை சத்யா நகரை சேர்ந்த பாசா என்பவர் மகன் சேட்டு வேலை செய்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு பத்மாவதியிடம் தங்க நாணயங்கள் குறைந்த விலைக்கு வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

வருமான வரி செலுத்த வேண்டிய பிரச்சனை உள்ளதால், குறைந்த விலைக்கு தங்க நாணயம் தருகின்றனர் எனக்கூறி, ரூ.65 லட்சம் மதிப்புள்ள நாணயங்களை ரூ.45 லட்சத்து பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரூ.20 லட்சத்துக்கு மட்டும் தற்போது வாங்கிக்கொள்ளலாம் என பேசி முடித்துள்ளனர். முன்னதாக தங்கத்தின் தரத்தை உறுதிபடுத்த வேண்டும் எனக்கூறியதால் சேட்டு, அவரது நண்பரான சேக்மைதீன் என்பவரின் மகன் முகமது ஜாவித் (34) ஆகிய இருவரும் பெங்களூரில் இருந்து பெற்று வந்ததாக கூறி இரு தங்க நாணயங்களை கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.

இதனை கடைக்கு சென்று சோதனை செய்து பார்த்தபோது உண்மையான நாணயங்கள் தான் என தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் நம்பிய பத்மாவதி ரூ.20 லட்சம் கொடுத்து நாணயங்கள் பெற்று வரச்சொல்லியுள்ளார்.

இதனையடுத்து இருவரும் பெங்களூர் சென்று நாணயங்கள் வாங்கி வந்துள்ளனர். இதனை பெங்களூர் பகுதியில் உள்ள ராஜேஸ் என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததாக தெரிகிறது. மொத்தம் 1600 நாணயங்கள் கொண்டு வந்து பத்மாவதி யிடம் கொடுத்துள்னர் ஆனால் அதனை பத்மாவதி கடையில் சோதனை செய்து பார்த்தபோது நாணயங்கள் அணைத்தும் போலியானவை எனத்தெரியவந்தது. இதனையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பத்மாவதி நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் இதில் இடைத்தரகர்களாக செயல்பட்ட சேட்டு, முகமது ஜாவித் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த மோசடியில் பெங்களூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ் உள்ளிட்ட நால்வர் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவரது தகவலின் பேரில் பெங்களூர் சென்ற போலீஸாருக்கு ராஜேஸ் உள்ளிட்ட மோசடி கும்பல் தலைமறைவானது தெரியவந்தது. இதனையடுத்து நால்வர் மீதும் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News