2-வது நாளாக தொடரும் கிராமப்புற தபால் ஊழியர் வேலை நிறுத்தப் போராட்டம்

Update: 2023-12-14 01:51 GMT

அஞ்சலகம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழிபயர்கள் சங்கம் சார்பில், கிராமிய தபால் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் அனைத்து சாதகமான பரிந்துரைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கிராமப்புற தபால் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவ வசதிகள் வழங்க வேண்டும். வேலைப்பளுவை காரணம்காட்டி லெவல்-2 ஊதியம் வழங்காமல், லெவல் 1 ஊதியம் வழங்குவதை நிறுத்த வேண்டும். கிளை அஞ்சலகங்களுக்கு மடிக்கணினி, பிரிண்டர், அதிவேக இணைய சேவை உள்ளிட்ட வசதிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப்புற தபால் ஊழியர்கள் டிசம்பர் -12ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் கோட்ட கிராமப்புற தபால் ஊழியர்கள் கூட்டமைப்பின் கோட்டத் தலைவர் ரவீந்திரன் தலைமையில், கிராமப்புற தபால் ஊழியர்கள் 90- க்கும் மேற்பட்டோர் டிசம்பர் 13ம் தேதி 2வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர. இதனால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளகிராமப்புற பகுதிகளில் தபால் பட்டுவாடா மற்றும் மணியார்டர் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News