காலாவதியான மதுபாட்டில் விற்பனை:கேள்வி கேட்ட நபரால் பரபரப்பு

திருப்பத்தூர் அருகே அரசு மதுபான கடையில் காலாவதியான மது பாட்டில்கள் விற்பனை குறித்து ஊழியர்களை சர மாறியாக கேள்வி கேட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-07 10:55 GMT

கேள்வி கேட்ட நபர்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலை, விஷமங்கலம் அருகே உள்ள நாகராஜன்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது அப்பகுதியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் எனமதுபான கடைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி இந்த மதுபான கடையில் 200 ரூபாய் அளவிலான மது பாட்டிலை வாங்கியுள்ளார் அப்போது அந்த மது பாட்டிலுக்கு 25 கூடுதலாக வாங்கிக் கொண்டு மது பாட்டிலை ஊழியர்கள் கொடுத்துள்ளனர். அதனைப் பார்த்து அந்த நபர் மது பாட்டில் காலாவதி ஆகி உள்ளது எனவே இதனை மாற்றித் தரும்படி கேட்டுள்ளார் ஆனால் கடை ஊழியர்கள் ஒன்றும் ஆகாது போய் குடி என்று கூறியதால் அந்த நபர் சர மாறியாக மதுபான கடை ஊழியர்களை கேள்வி கேட்டுள்ளார்.

இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த நிலையில் அங்கு செய்தி சேகரிக்க சென்று செய்தி எடுத்து கொண்டு இருந்த போது உள்ளே இருந்து வெளியே வந்த விற்பனையாளர் கோவிந்தராஜ் என்பவர் செய்தி சேகரித்து கொண்டு இருந்த செய்தியாளரிடம்,

நீங்க மட்டும் தான் வீடியோ எடுபீங்களா நானும் எடுப்பேன் என்று செய்தியாளரை வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News