சட்டவிரோத புகையிலை விற்பனை
கரூர் மாவட்டம், தடாகோவில் பிரிவு அருகே சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்றபனையில் ஈடுப்பட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தடா கோவில் பிரிவு பகுதியில், சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஜனவரி ஒன்பதாம் தேதி மதியம் 12 மணியிலிருந்து ஒரு மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தடாகோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் அரவக்குறிச்சி, ராஜபுரம், ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த பூவரசன் வயது 24 என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் விமல் பாக்கு ஆகியவற்றை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, விற்பனைக்கு வைத்திருந்த 47 கிராம் விமல் பாக்கு மற்றும் ஹான்ஸ் ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், பூவரசன் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.