சேலம் : 18 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சேலம் சரகத்தில் 18 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. உமா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-02-26 01:12 GMT

டி.ஐ.ஜி. உமா

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் சரகத்தில் 18 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி சேலம் மாவட்டம் மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி தலைவாசலுக்கும், மேட்டூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி இரும்பாலை மதுவிலக்கு பிரிவுக்கும், தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி மேட்டூருக்கும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் பள்ளிப்பாளையத்துக்கும், அங்கு பணியாற்றிய சுகுமார் திருச்செங்கோட்டுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் தர்மபுரி மாவட்டம் அரூர் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய உமாசங்கர் பென்னாகரத்துக்கும், அங்கு பணியாற்றிய முத்தமிழ்செல்வன் கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஏற்காட்டுக்கும், தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் பரமத்திக்கும் மாற்றப்பட்டனர்.

குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தேன்கனிக்கோட்டைக்கும், மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் திருச்செங்கோடு டவுனுக்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மேச்சேரிக்கும், பரமத்தி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் குமாரபாளையத்துக்கும், மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமத்ரா சங்ககிரி மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய வளர்மதி மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், கருமலைக்கூடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் ஏத்தாப்பூருக்கும், அங்கு பணியாற்றிய முருகன் கருமலைக்கூடலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை சேலம் சரக டி.ஜ.ஜி. உமா பிறப்பித்தார்.

Tags:    

Similar News