மாற்று திறனாளி பராமரிப்பாளர்களுக்கு உதவித்தொகை-பயனாளிகள் தேர்வு!

பராமரிப்பாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை .

Update: 2024-02-07 10:20 GMT

பராமரிப்பாளர்களுக்கு உதவித்தொகை .

கோவை: தமிழக அரசின் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு நலதிட்டங்கள் செயல்படுத்தபடுகிறது. இவர்களுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் உதவித் தொகை வழங்கபட்டு வரும் நிலையில் தங்களால் சுயமாக கவனித்து கொள்ள முடியாமல் வேறு ஒருவர் பராமரிப்பில் மாற்று திறனாளிகளை கவனித்து கொள்ளும் பராமரிப்பாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை I Support Need என்ற திட்டத்தின் கீழ் வழங்கபடுகிறது. அரசின் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் தேர்வு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்று திறனாளிகள் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.ஏராளமானோர் உதவித்தொகை கோரி பரமரிப்பாளர்கள் மாற்று திறனாளி பயனாளிகளுடன் வந்திருந்தனர்.தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யபடுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அலுவலக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News