பள்ளி மாணவர்கள் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் சார்பில் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update: 2023-11-01 07:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் அக்டோபர் 31ம் தேதியான கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் சார்பில் ஒற்றுமை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் துவங்கிய பேரணியை கல்லூரி முதல்வர் மேகநாதன் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பாலக்கரை, வெங்கடேசபுரம், ரோவர் வளைவு வழியாக சங்குப்பேட்டை வரை வந்த மாணவர்களின் பேரணி மீண்டும் அதே வழியாக பள்ளியில் முடிவடைந்தது. பேரணியில் சென்ற மாணவ மாணவிகள் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமான ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் குறிப்பிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு அதுகுறித்து விழிபுணர்வு கோஷமிட்டு சென்றனர். பேரணியில், பெரம்பலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள், ஷ்வேந்தர் குமார் ஷர்மா, தமிழ், ரஞ்சிதா, சினேகபிரியா, மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News