இரண்டாம் கட்ட வாக்குச்சாவடி அலுவலர் பணி ஒதுக்கீடு!
திருச்சி மக்களவைத் தொகுதி மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குச்சாவடி அலுவலர் பணி ஒதுக்கீடு.;
Update: 2024-04-03 07:19 GMT
பணி ஒதுக்கீடு
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருச்சி மக்களவைத் தொகுதி மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி நிலை அளவிலான பணியாளர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பணியின்போது,திருச்சி தொகுதி தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார், சிவகங்கை தொகுதி தேர்தல் பார்வையாளர் எஸ். ஹரீஷ் ஆகியோரும் உடனிருந்தனர். மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா. மெர்சி ரம்யா இப்பணிகளைத் தொடங்கி வைத்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர்கள் பெ.வே. சரவணன் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு), ஆர். ரம்யாதேவி (காவிரி- குண்டாறு இணைப்பு நிலமெடுப்பு) ஆகியோரும்நிலமெடுப்பு) ஆகியோரும் உடனிருந்தனர்.