தொழில்முறை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம்
தொழில்முறை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம்;
By : King 24x7 Website
Update: 2024-02-09 06:12 GMT
தொழில்முறை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி வணிகவியல் (கணிப்பொறி அறிவியல்) துறை சார்பாக 08.02.2024 அன்று "தொழில்முறை வாய்ப்புகள்" குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. உதவிப்பேராசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். துறைத்தலைவர் நாசர் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சென்னை, சேகரன் அஸோஸியேட்ஸ், பட்டய கணக்காளர் (Charted Accountant) மணிமாறன் கதிரேசன் அவர்கள் கலந்துகொண்டு தொழில்முறை வாய்ப்புகள் குறித்து பேசினார். இறுதியாக உதவிப்பேராசிரியை தீபிகா நன்றி கூறினார்.