திருச்செந்தூருக்கு 14 மின்மோட்டார்கள் அனுப்பி வைப்பு

சேலம் மாநகராட்சியில் இருந்து திருச்செந்தூருக்கு 14 மின்மோட்டார்கள் அனுப்பி வைகக்கப்பட்டது.

Update: 2023-12-19 09:33 GMT

மின்மோட்டார் அனுப்பி வைப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளபாதிப்பு பகுதிகளை விரைவாக சீரமைக்கும் வகையில் பல்வேறு மாநகராட்சிகளில் இருந்து மின் மோட்டார் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாநகராட்சியில் இருந்து 29 மின் மோட்டார்களும், சேலம் மாநகராட்சியில் இருந்து 14 மின்மோட்டார்களும் மற்றும் செங்கல்பட்டு மண்டலத்தில் இருந்து 18 மின்மோட்டார்களும் என மொத்தம் 61 மின் மோட்டார்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட 4 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர், கயல்பட்டிணம் நகராட்சியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் வகையில் சேலம் மாநகராட்சியில் இருந்து 9,எச்பி மின் மோட்டார் 4-ம், 7எச்பி மின் மோட்டார் 4-ம், 5 எச்பி மின்மோட்டார் 6ம் என மொத்தம் 14 மின் மோட்டார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்களை 2 லாரிகளில் 15க்கும் மேற்பட்ட பிட்டர்கள் கொண்டு சென்றுள்ளனர். இதனை மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு அனுப்பி வைத்தனர். அதில் துணை கமிஷனர் அசோக்குமார். செயற்பொறியாளர்கள் செந்தில்குமார். உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News