தலைமலை கிரிவலசாலை பணியை சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி தொடங்கி வைப்பு

தலைமலை சேவா ட்ரஸ்ட் நிர்வாக அறங்காவலர் அக்னி ராஜேஷ் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ-வுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.

Update: 2024-07-05 12:31 GMT

பணியை தொடக்கி வைத்த எம்எல்ஏ

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் பிரசித்தி பெற்ற தலைமலை அமைந்துள்ளது. இந்த தலைமலையானது பெருமாளே வான்நோக்கி படுத்திருப்பது போன்ற அமைப்பில் அமைந்திருப்பது சிறப்பானதாகும்.

இந்த தலைமலையில் அமைந்துள்ள சுயம்பு பெருமாள் மிகவும் சக்தி படைத்தவர் என்பதால் மலை உச்சியில் கிரிவலம் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருவது காலம் காலமாக நடந்து வந்தது. 2017 ஆம் வருடம் ஒருவர் 2700 அடி உயரத்தில் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்துவிட்டதால்,

தலைமலை உச்சியில் நடந்து வந்த கிரிவலத்தை அரசு தடை செய்து விட்டது. இந்நிலையில் தலைமலை பெருமாள் கோவில் அறங்காவலர் கனவில் பெருமாள் சொன்னதால் தலைமலை வளர்ச்சி பணிகளுக்காக ஈரோட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட அக்னி ராஜேஷ் நிர்வாக அறங்காவலராக பொறுப்பேற்று தலைமலை சேவா டிரஸ்ட் 2018ல் தொடங்கப்பட்டு தலைமலை வளர்ச்சி பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி தலைமலை சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் சென்னையில் நேரில் சந்தித்து தலைமலை கிரிவலப் பாதையை சாலையாக மாற்றிடவும் கிரிவலம் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தரவும் கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்றுக் கொண்ட சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் தொடர்ந்து தலைமலை கிரிவல பாதை அமைத்திடவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுத்திட கோரிக்கை வைத்ததின் அடிப்படையில்,இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் (2024- 2025ல் ) ரூபாய் இரண்டு கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்,வருவாய் துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், உள்ளிட்டோர் ஆய்வு செய்திட தலைமலை சேவா டிரஸ்ட் 27 கிலோமீட்டர் கிரிவலப் பாதையை உருவாக்கி, முதல் கிரிவலம் தொடங்கிய இடமான தலைமலை அடிவாரம் வடவத்தூருக்கு வருகை தந்தனர். இந்நிலையில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி தலைமலை கிரிவல சாலை ஆய்வு பணியை நேரில் பார்வையிட்டு எருமப்பட்டி ஒன்றிய அட்மா குழு தலைவர் பாலு ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் தலைமலை சேவா டிரஸ்ட் உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் சிவராஜ், தமிழன் செல்வகுமார், துரைசாமி,செந்தில், பாரதி,சீனிவாசன், பெருமாள் மற்றும் தலைமலை சேவா டிரஸ்ட் அறங்காவலர் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமலை சேவா ட்ரஸ்ட் நிர்வாக அறங்காவலர் அக்னி ராஜேஷ் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமிக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.

தலைமலை கிரிவலப் பாதை மற்றும் தலைமலை பற்றிய விபரங்களை ஆய்வு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்.இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி செயற் பொறியாளர்கள் சந்திரசேகரன், காணீஷ்வதி,உதவி ஆணையர் சரவணன், 

ஆய்வாளர் இந்து சமய நலத்துறை வட்டாட்சியர் சுவாமி நாதன், ஆலய நிலங்கள் துறை சுந்தர வள்ளி, துணை ஆட்சியர் ஓய்வு குப்புசாமி, நில அளவையர் நாமக்கல் வனத்துறை அலுவலர் தலைமலை (பொ) யுக்னேஷ்,இந்து சமய நலத்துறை ஆய்வாளர் சுந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News