போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை !
போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-08 11:37 GMT

பணி நியமன ஆணை
கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி II/II ஏ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் பயின்று 9 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், பணிநியமன ஆணையும், ஊக்கப்பரிசும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா ஜி இம்மானுவேல், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.