அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சிபிசிஐடி நடத்திய சோதனையால் பரபரப்பு !

கரூரில், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சிபிசிஐடி போலீசார் ஏழு தனிப்படை அமைத்து நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-07-08 11:52 GMT

சோதனை

கரூரில், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சிபிசிஐடி போலீசார் ஏழு தனிப்படை அமைத்து நடத்திய சோதனையால் பரபரப்பு. கரூரில், நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2-வது முறையாக முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனு மீதான விசாரணை நான்காவது முறையாக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். கரூரில், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தொடர்புடைய நில மோசடி வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு கடந்த 25-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. தனது தந்தையின் உடல்நிலை கருத்தில் கொண்டு அவரை கவனித்துக் கொள்ள வேண்டுமென்ற மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் கேட்டு மீண்டும் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இருதரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம், மனு மீதான விசாரணையை நான்காவது முறையாக நேற்று விசாரணை நடத்தியதில் மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி,சேலம், கரூர் பகுதியிலிருந்து வந்த சிபிசிஐ டி காவல்துறையினர் இன்று காலை முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்க்கு சொந்தமான, கரூர் - கோவை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க், அவரது வீடு, எம் ஆர் வி டிரஸ்ட் நிறுவனம், அவரது சகோதரர் வீடு, ராமானுஜம் நகர் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட் போன்ற பல்வேறு இடங்களில் 7 தனிப்படை அமைத்து சோதனை நடத்தினர். மேலும், இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் இடையேயும், பொது மக்களிடையேயும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News