இலவச தையல் இயந்திரங்கள் வழங்கிய கலெக்டர் !

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச தையல் இயந்திரங்கள்  கலெக்டர் வழங்கினார்.;

Update: 2024-07-08 12:03 GMT

இலவச தையல் இயந்திரங்கள்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்  தலைமையில்,  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று  (08.07.2024) நடைபெற்றது.        இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி,  சாலை வசதி  உள்ளிட்ட  பல்வேறு  நலத்திட்ட  உதவிகள் கோரி 453 கோரிக்கை  மனுக்கள்  இன்று  பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை  மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்தினார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து  சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ்  1 பயனாளிக்கு எம்பிராய்டரி தையல் இயந்திரமும், 4 பயனாளிக்கும் சாதாரண தையல் இயந்திரத்தினையும் கலெக்டர்  வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் (நிலம்) செந்தில்வேல் முருகன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சேக் அப்துல் காதர்,  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் கனகராஜ், உயர் அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News