ஏழாம் வகுப்பு மாணவி 6900 சதுர அடி பரப்பளவில் துணி பையை தைத்து சாதனை
சுற்று சூழலை பாதுகாப்பது குறித்தும் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-17 12:35 GMT
ஏழாம் வகுப்பு மாணவி 6900 சதுர அடி பரப்பளவில் துணி பையை தைத்து சாதனை
சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் மாணவி கௌசிகா சுற்று சூழலில் பாதுகாப்பது குறித்தும் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பது குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1300 மீட்டர் நீளம் கொண்ட துணியை பயன்படுத்தி 6 ஆயிரத்து 900 சதுர அடியில் துணி பையை கைகளால் தைத்து கலாம் உலக சாதனையை செய்துள்ளார். பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன் காலநிலை மாற்றமும் அவ்வப்போது மாறி வருகிறது குறிப்பாக சுற்றுலா தலம் மற்றும் மலைப்பகுதிகளில் இது போன்ற பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் பயன்படுத்துவதால் நீர்நிலைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து பழைய முறைகளில் துணி பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக 6900 சதுர அடியில் துணி பையை கைகளால் தைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த கலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனையை செய்ததாக கூறினார். மாணவி கௌசிகா ஏற்கனவே ஜி 20 மாநாடு லோகோவை 5200 . சதுர அடி அளவில் கோலங்களால் வரைந்து சாதனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.