கன்னியாகுமரி அருகே சாஸ்தா கோயில் குடமுழுக்கு

கன்னியாகுமரி அருகே சாஸ்தா கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

Update: 2024-02-22 13:49 GMT
கன்னியாகுமரி சாஸ்தா கோவில் கும்பாபிஷேகம்

கன்னியாகுமரி அருகே வடக்குத் தாமரைக்குளத்தில் உள்ள அருள்மிகு ஆபத்துகண்டன் சாஸ்தா கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இக்கோயிலில் ரூ. 35 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றன.      தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் , குடமுழுக்கு விழா நடைபெற்றது. குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இணை ஆணையா் ரத்னவேல் பாண்டியன் முன்னிலை வகித்தாா். விழாவில் நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், அறநிலையத் துறை மராமத்துப் பொறியாளா் ராஜ்குமாா், ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன், வடக்குத் தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் ஆறுமுகம்பிள்ளை, மாநில வா்த்தக அணி துணைச் செயலா் தாமரைபாரதி, ஒன்றியச் செயலா் பாபு, திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Tags:    

Similar News