சிக்கல் சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு நிறைவு விழா

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் குடமுழுக்கு நடைபெற்று முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது.

Update: 2024-06-25 14:07 GMT

சிக்கல் சிங்காரவேலர்

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் குடமுழுக்கு நடைபெற்று முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி சம்வத்ஸராபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை (திங்கட்கிழமை ) அனுக்கை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை  யாகசாலை பூஜைகள் நடைபெற்று, சுந்தரகணபதி, நவநீதேஸ்வர சாமி, சத்யாயதாட்சி, சிங்காரவேலவர் ஆகியோருக்கு அபிஷேகம் நடைபெற்று, சம்வத்ஸராபிஷேக பிரதான கலாசபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் நாகை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், கோவில் செயல் அலுவலர் மணிகண்டன், உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News