சிவகங்கை: ஓய்வூதியர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Update: 2023-12-13 04:34 GMT

ஆர்ப்பாட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும், குறிப்பாக பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 70 வயதை கடந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வணக்காவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊரக நூலகர்கள், கிராம உதவியாளர்கள் அனைவருக்கும் குறைந்த பட்சம் ஓய்வூதியம் மாதம் 7,850 ரூபாய் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அனைத்து நோய்களுக்கும் நிபந்தனையின்றி இலவச மருத்துவ காப்பீட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News