விளைச்சல் குறைவால் சிறு கிழங்கு விலை உயர்வு
Update: 2023-12-12 04:50 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கடையம், ரவண சமுத்திரம், காக்க நல்லூர், அடைச்சாணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறு கிழங்கு முக்கிய விவசாயமாக பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் கேரள மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மஞ்சள் மற்றும் சுருட்டை நோயால் சிறு கிழங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தர சிறு கிழங்கு ஒரு கிலோ 65 ரூபாய் மற்றும் இரண்டாம் தரம் சிறு கிழங்கு 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சிறு கிழங்கு விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை உயர்ந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.