நகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை வசதி

கோடப்பமந்து நகராட்சி நடுநிலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-07 01:06 GMT

கோடப்பமந்து நகராட்சி நடுநிலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து நகராட்சி நடுநிலை பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில் நுட்பங்களை கொண்டு ரூபாய் 18 லட்சத்தில் ஸ்மார்ட் கிளாஸ் ரூமை, ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், நகர் மன்ற துணை தலைவர் ரவிக்குமார், நகர்மன்ற உறுப்பினர் விஷ்னு பிரபு கலந்துகொண்டு திறந்துவைத்து பார்வையிட்டனர் ஊட்டி நகர் மன்ற துணை தலைவர் ரவிகுமார் பேசுகையில், " தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளை தமிழக முதலைச்சர் ஸ்டாலின் மேம்படுத்தி வருகிறார். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்," என்றார்.

நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் பேசுகையில், " தற்போது திறக்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் ரூம் போன்று மாணவர்களுக்கும் ஸ்மார்ட் ஆக இருக்க வேண்டும். பள்ளியின் ஆசிரியர்களுக்கும் ஸ்மார்ட் ஆக மாணவர்களுக்கு படங்களை நடத்த வேண்டும், " என்றார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News